இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2022

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2022, வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. மேலும், குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 16 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 06 ஆம் தேதிக்குள் R. விஸ்வநாதனிடம் ரூ. 200/- செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளவும்.

குடிவரி: குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-

பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 200/-

குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு

இலுப்பையூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *