அன்புடையீர்!
வணக்கம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, மே மாதம் 05 ஆம் தேதி , (வெள்ளிக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் தொடங்க இருக்கின்றது.
குடியழைப்பு விழா – 2023 நிகழ்ச்சி நிரல்:
வெள்ளிக்கிழமை:
இரவு: புனித துளைக்கேணியில் கரகம் பாலித்து ஊர் சுற்றி வருதல்
சனிக்கிழமை:
காலை & மாலை: கரகம் ஊர் சுற்றி வருதல்
இரவு: காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் – 1 திரைப்படம் திரையிடல்
ஞாயிற்றுக்கிழமை:
காலை: சிற்றுண்டிதானம், பால்குட விழா மற்றும் கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல் & மாவிளக்கு பூஜை
திண்டுக்கல் துரை. சந்தோஷ் குழுவினரின் நாட்டுப்புறம் பல்சுவை கலை நிகழ்ச்சி
திங்கட்கிழமை:
காலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல், சுற்றுப்பொங்கல் வைத்து பூஜை, குத்துவிளக்கு பூஜை,
இரவு: அன்னதானம் & அருள்மிகு மகாமாரியம்மன் குதிரை வாகனத்தில், வான வேடிக்கை முழங்க, ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் குழுவினரின் தப்பாட்டத்துடன் திருவீதி உலா
செவ்வாய் கிழமை:
மதியம்: அன்னதானம் & மதியம் டிரம்ஸ் செட் முழங்க மஞ்சள் நீராடல்
மாலை: கரகம் குடி விடுதல்.
குடியழைப்பு விழா நிகழ்சியில் கலந்துக் கொண்டு அருள்மிகு மகாமாரியம்மன் திருவருளைப் பெற்றிடவும், சிறப்பு நிகழ்சிகளை கண்டுகளித்திடவும் அனைவரையும் வருக! வருக!! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
இப்படிக்கு,
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.