Author: admin
இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா): 2023 – நிகழ்ச்சி நிரல்

அன்புடையீர்!
வணக்கம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, மே மாதம் 05 ஆம் தேதி , (வெள்ளிக்கிழமை) வழக்கமான உற்சாகத்துடன் தொடங்க இருக்கின்றது.
குடியழைப்பு விழா – 2023 நிகழ்ச்சி நிரல்:
வெள்ளிக்கிழமை:
இரவு: புனித துளைக்கேணியில் கரகம் பாலித்து ஊர் சுற்றி வருதல்
சனிக்கிழமை:
காலை & மாலை: கரகம் ஊர் சுற்றி வருதல்
இரவு: காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் – 1 திரைப்படம் திரையிடல்
ஞாயிற்றுக்கிழமை:
காலை: சிற்றுண்டிதானம், பால்குட விழா மற்றும் கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல் & மாவிளக்கு பூஜை
திண்டுக்கல் துரை. சந்தோஷ் குழுவினரின் நாட்டுப்புறம் பல்சுவை கலை நிகழ்ச்சி
திங்கட்கிழமை:
காலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல், சுற்றுப்பொங்கல் வைத்து பூஜை, குத்துவிளக்கு பூஜை,
இரவு: அன்னதானம் & அருள்மிகு மகாமாரியம்மன் குதிரை வாகனத்தில், வான வேடிக்கை முழங்க, ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் குழுவினரின் தப்பாட்டத்துடன் திருவீதி உலா
செவ்வாய் கிழமை:
மதியம்: அன்னதானம் & மதியம் டிரம்ஸ் செட் முழங்க மஞ்சள் நீராடல்
மாலை: கரகம் குடி விடுதல்.
குடியழைப்பு விழா நிகழ்சியில் கலந்துக் கொண்டு அருள்மிகு மகாமாரியம்மன் திருவருளைப் பெற்றிடவும், சிறப்பு நிகழ்சிகளை கண்டுகளித்திடவும் அனைவரையும் வருக! வருக!! என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
இப்படிக்கு,
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.
மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி

இலுப்பையூர்
அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023
முன்னிட்டு,
வருகின்ற மே மாதம் 07 ஆம் தேதி (சித்திரை 24) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
மக்கள் நாயகன், கலைச்சுடர்மணி
திண்டுக்கல் துரை. சந்தோஷ்
&
நடனப்புயல்
புதுகை சசியின்
கிராமத்து புள்ளிங்கோ
இணைந்து கலக்கும்
நாட்டுப்புறம்
கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சி
இலுப்பையூர் மகாமாரியம்மன் கோவில் முன்புறம் வெகுசிறப்பாக நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியை கண்டுகளிக்க அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்.
இப்படிக்கு,
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.
Iluppaiyur Chithirai Festival 2023 – Special Programmes

இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, வருகின்ற மே மாதம் 05 ஆம் தேதி (சித்திரை 22) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 09 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது.
குடியழைப்பு விழாவினை முன்னிட்டு கீழ்கண்ட நிகழ்ச்சிகள் இளைஞர் அணியினரால் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மே மாதம் 06 ஆம் தேதி – சனிக்கிழமை இரவு – திரைப்பட ஒளிபரப்பு
- மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – திண்டுக்கல் துரை. சந்தோஷ் வழங்கும் களம் கலைப்பட்டறை குழுவின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி
- மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – குத்து விளக்கு பூஜை*
- மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – அருள்மிகு மகா மாரியம்மன் திருவீதி உலா – பூ அலங்காரம்
- மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – வானவேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளம்
- மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – பிரசாதப்பை.
- மே மாதம் 09 ஆம் தேதி – செவ்வாய்கிழமை – டிரம் செட்*
*பரிசீலனையில் உள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாக நடத்துவதற்கு கிராமப் பொதுமக்கள், இளைஞர் அணியினர், மற்றும் பக்தர்கள் என அனைவரும் நன்கொடை தாராளமாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை அளிக்க: https://pages.razorpay.com/iluppaiyur2023
இளைஞர் அணியினரின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கணக்கு விவரம் மே மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு வெளியிடப்படும்.
குடியழைப்பு விழாவின் முழு நிகழ்ச்சி நிரல் அனைத்து நிகழ்ச்சிகளும் இறுதி செய்த பின் வெளியிடப்படும்.
இப்படிக்கு
இளைஞர் அணியினர்.
இலுப்பையூர் மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா – 2022: இளைஞரணி வரவு செலவு கணக்கு விபரம்
உ
இலுப்பையூர் மகாமாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா – 2022
அன்புடையீர்!
வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2022, மே 06 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை வெகுசிறப்பாக நடைபெற்றது. குடியழைப்பு விழாவிற்கு இளைஞர் அணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் மற்றும் வரவு செலவு கணக்கு விபரம் பின்வருமாறு:
நன்கொடை (வரவு)
வ. எண் |
பெயர் |
தகப்பனார் பெயர் |
தற்போதைய இருப்பிடம் |
தொகை (ரூபாய்) |
1. |
தெ. ஜெயன்குமார் |
பு. தெவராயப்பிள்ளை |
அமெரிக்கா |
15000 |
2. |
து. செந்தில்குமார் |
மா. துரைராஜு |
கத்தார் |
10000 |
3. |
பு. பிரபாகரன் |
பெ. புரவியாப்பிள்ளை |
ஈராக் |
10000 |
4. |
மா. பாலக்குமார் |
க. மாணிக்கம்பிள்ளை |
மாலத்தீவு |
10000 |
5. |
சௌ. பாலமுருகன் |
ந. சௌந்தராஜன் |
அமெரிக்கா |
10000 |
6. |
சு. சரவணன் |
க. சுப்ரமணியன் |
துபாய் |
5000 |
7. |
பி. கண்ணன் |
பிச்சை (பி. கமலம்) |
மண்ணச்சநல்லூர் |
5000 |
8. |
மு. ஆசாந்த் |
பெ. முத்தையா |
சென்னை |
3000 |
9. |
த. தினேஸ்குமார் |
ம. தங்கவேல்பிள்ளை |
இலுப்பையூர் |
3000 |
10. |
சொ. சரவணன் (SS) |
இ. சொக்கலிங்கம் |
திருச்சி |
2500 |
11. |
தே. அரவிந்தன் |
பொ. தேவராசு |
சென்னை |
2500 |
12. |
தே. தினேஷ்குமார் |
பொ. தேவராசு |
சென்னை |
2500 |
13. |
வி. மனோஜ் |
சோ. விஸ்வநாதன் |
இலுப்பையூர் |
2500 |
14. |
வெ. திருப்பதி (SS) |
பெ. வெங்கடாசலம் |
இலுப்பையூர் |
2500 |
15. |
பு. சிவக்குமார் (மிலிட்டரி) |
பெ. புரவியாப்பிள்ளை |
துறையூர் |
2000 |
16. |
ச. பிரபாகரன் |
ர. சண்முகம்பிள்ளை |
சென்னை |
2000 |
17. |
த. சுதன் |
சு. தங்கராசு |
திருச்சி |
2000 |
18. |
ம. செல்வக்குமார் (SS) |
மருதை (ம. பரமேஸ்வரி) |
கரட்டாம்பட்டி |
2000 |
19. |
ம. விஜயக்குமார் (SS) |
மருதை (ம. பரமேஸ்வரி) |
இலுப்பையூர் |
2000 |
20. |
பெ. சண்முகராஜா (SS) |
பெரியசாமிப்பிள்ளை |
திருச்சி |
2000 |
21. |
க. நிஷாந்தன் |
சி. கந்தசாமி |
திருச்சி |
2000 |
22. |
பு. குணசேகரன் |
மூ. புரவியாப்பிள்ளை |
சென்னை |
1000 |
23. |
ரா. ஜீவா |
க. ரவிச்சந்திரன் |
இலுப்பையூர் |
1000 |
24. |
ரா. பாலாஜி |
ராமலிங்கம் |
இலுப்பையூர் |
1000 |
25. |
ரா. நிரஞ்சன் |
ராமலிங்கம் |
இலுப்பையூர் |
1000 |
26. |
சா. அருள் |
சாம்பசிவம் |
சென்னை |
1000 |
27. |
சொ. பிரசாந்த் |
இ. சொக்கலிங்கம் |
சென்னை |
1000 |
28. |
க. கோபி (Lorry) |
கந்தசாமி |
நாமக்கல் |
1000 |
29. |
பெ. கருப்பையா |
பெருமாள்பிள்ளை |
சென்னை |
1000 |
30. |
சு. பாலகிருஷ்ணன் |
சுப்ரமணியப்பிள்ளை |
சென்னை |
1000 |
31. |
வெ. சதிஸ்குமார் |
வெங்கடாசலம் |
ஈரோடு |
1000 |
32. |
வி. பிரபாகரன் (காட்டுப்புத்தூர்) |
விக்கிரமபூபதி (வி. பரமேஸ்வரி) |
திருச்சி |
1000 |
33. |
சு. செல்வராஜ் (SS) |
சி. சுந்தரம்பிள்ளை |
திருச்சி |
1000 |
34. |
ச. ராகேஷ் |
பெ. சண்முகம் |
பெங்களூரு |
1000 |
35. |
க. கங்காதரன் |
கந்தசாமி (க. மகேஸ்வரி) |
இலுப்பையூர் |
1000 |
36. |
க. கோபி |
கந்தசாமி (க. மகேஸ்வரி) |
இலுப்பையூர் |
500 |
37. |
சி. மகேந்திரன் (SS) |
பெ. சிவலிங்கம்பிள்ளை |
மண்ணச்சநல்லூர் |
500 |
38. |
க. சரவணன் |
க. கனகராஜன் |
இலுப்பையூர் |
500 |
39. |
மா. கிருபாகரன் |
ம. மாதர்நாதன் |
இலுப்பையூர் |
500 |
40. |
செ. அபிலேஸ்வரன் |
செல்வநாதன் (செ. சந்திரா ) |
இலுப்பையூர் |
500 |
|
|
|
மொத்த வரவு |
1,14,000 |
|
|
|
மொத்த செலவு |
90,920 |
|
|
|
மீத இருப்பு |
23,080 |
விழா ஏற்பாடுகள் (செலவு) விவரம்
வ. எண் |
நிகழ்ச்சி/ செலவு விவரம் |
தொகை (ரூபாய்) |
1. |
வரவேற்பு பதாகை (Flex) |
1800 |
08/05/2022 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி |
||
2. |
லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மையத்தின் ராஜபார்வை இன்னிசை குழு |
25000 |
3. |
நிகழ்ச்சி மேடை அமைக்க |
10000 |
4. |
ஜெனரேட்டர் |
5500 |
5. |
மேடை விரிப்பு |
700 |
09/05/2022 திங்கள் கிழமை நிகழ்ச்சி |
||
6. |
ஈரோடு வெற்றி விநாயகர் குழுவின் தப்பாட்டம் |
40000 |
7. |
பிரசாதப் பை |
2400 |
8. |
லட்டு |
2400 |
9. |
சாத்துக்குடி |
2600 |
10
|
விபூதி குங்கும கவர் |
160 |
11. |
விபூதி மற்றும் குங்குமம் |
360 |
|
மொத்த செலவு |
90920 |
மற்ற ஏற்பாடுகள் / நன்கொடை |
||
1. |
பந்தலுக்கு வாழை மரங்கள் |
பெ. மனோகரன் |
2. |
வெடி மற்றும் வான வேடிக்கை |
ந. பிரகாஷ் |
3. |
இன்னிசை குழுவினருக்கு இரவு உணவு |
நா. அரவிந்தன் |
4. |
திங்கட்கிழமை இரவு உணவு |
பி. கண்ணன் |
5. |
காவலர், தப்பாட்ட குழுவிற்கு டீ, பிஸ்கெட், மண்டப பாத்திரம் கிளினிங் |
பி. கண்ணன் |
6. |
செவ்வாய் கிழமை பம்பை மேளம் |
ச. மகேஸ்வரன் |
7. |
செவ்வாய் கிழமை டிரம்ஸ் |
ச. மகேஸ்வரன் த. ஆனந்தன் |
குடி அழைப்பு விழா – 2022 சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், விழா ஏற்பாடுகள் மற்றும் களப்பணி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.
இப்படிக்கு
இளைஞரணியினர்
இலுப்பையூர்
16/05/2022
இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா): 2022 – நிகழ்ச்சி நிரல்

அன்புடையீர்!
வணக்கம். மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொன்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயச் சித்திரைத் திருவிழா (குடியழைப்பு விழா) – 2022 வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) செவ்வாய்கிழமை வரை கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி கோலாகலமாக நடைபெற இருக்கின்றது.
நிகழ்ச்சி நிரல்
06.05.2022 வெள்ளிக்கிழமை
இரவு 10.00 மணிக்கு புனித துளைக்கேணிக்கு கரகம் பாலிக்க செல்லுதல்
இரவு 11.30 மணியளவில் கரகம் பாலித்து ஊர் வலம் வருதல்
07.05.2022 சனிக்கிழமை
காலை 11.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்
மாலை 06.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்
08.05.2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 07.00 மணிக்கு பால்குடம் பாலிக்க செல்லுதல்
காலை 09.00 மணிக்கு பம்பை மேளம் முழங்க, பால்குடம், கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
காலை 11.00 மணிக்கு அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
இரவு 07.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு பூஜை
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை
09.05.2022 திங்கள் கிழமை
காலை 11.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
மாலை 04.30 மணி முதல் சுற்று பொங்கல் வைத்தல்
மாலை 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு பொங்கல் பூஜை
இரவு 09.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 11.00 மணிக்கு வான வேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளத்துடன், அருள்மிகு மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருதல்
10.05.2022 செவ்வாய் கிழமை
காலை 11.00 மணிக்கு இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை
நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
மதியம் 02.00 மணிக்கு கரகம் மற்றும் வேல், பம்பை மேளம் முழங்க ஊர் வலம் மற்றும் மஞ்சள் நீராடி விளையாடுதல்
மாலை 06.00 மணியளவில் கரகம் குடி விடுதல்
அனைவரும் இலுப்பையூர் குடியழைப்பு திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறாம்!!!💐💐💐
இப்படிக்கு,
ஆ.வே.ச இளைஞர் அணி,
மற்றும் விழாக்குழுவினர்
இலுப்பையூர்.
இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2022

அன்புடையீர்,
வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2022, வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. மேலும், குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 16 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 06 ஆம் தேதிக்குள் R. விஸ்வநாதனிடம் ரூ. 200/- செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளவும்.
குடிவரி: குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-
பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 200/-
குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
இப்படிக்கு,
நிர்வாகக்குழு
இலுப்பையூர்.
பதினைந்தாம் ஆண்டு பால்குட விழா – 2019
குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.
பால் குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் : ரூ. 150/-
பால் குடம் எடுப்பதுப் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
தே. அரவிந்தன் (+91 – 96988 08960, +91 – 86670 80269),
த. ஆனந்தன் (+91- 96987 94856).
பால்குடம் எடுப்பவர்கள் முன்பதிவு செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
பால்குடம் எடுப்பதற்கான கட்டணம் செலுத்துவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019
அன்புடையீர்,
வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019, வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 14 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. மேலும், குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.
குடிவரி: குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-
பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 150/-
குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.
மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
இப்படிக்கு,
நிர்வாகக்குழு
இலுப்பையூர்.
A.V.S. திருமண மஹால் – திறப்பு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்!
வணக்கம். வருகின்ற தை மாதம் 02 ஆம் நாள் (16-01-2019) புதன்கிழமை, அதிகாலை 04.30 மணிக்குமேல் 06.00 மணிக்குள்
இலுப்பையூர் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ள
A.V.S. திருமண மஹால்
ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை செய்து, திறப்பு விழா நடைபெறுவதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.