அன்புடையீர்!
வணக்கம். மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொன்டிருக்கும் இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயச் சித்திரைத் திருவிழா (குடியழைப்பு விழா) – 2022 வருகின்ற மே மாதம் 06 ஆம் தேதி (சித்திரை 23) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) செவ்வாய்கிழமை வரை கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி கோலாகலமாக நடைபெற இருக்கின்றது.
நிகழ்ச்சி நிரல்
06.05.2022 வெள்ளிக்கிழமை
இரவு 10.00 மணிக்கு புனித துளைக்கேணிக்கு கரகம் பாலிக்க செல்லுதல்
இரவு 11.30 மணியளவில் கரகம் பாலித்து ஊர் வலம் வருதல்
07.05.2022 சனிக்கிழமை
காலை 11.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்
மாலை 06.00 மணிக்கு கரகம் ஊர் வலம் வருதல்
08.05.2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 07.00 மணிக்கு பால்குடம் பாலிக்க செல்லுதல்
காலை 09.00 மணிக்கு பம்பை மேளம் முழங்க, பால்குடம், கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
காலை 11.00 மணிக்கு அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் மகா மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் வலம் வருதல்
இரவு 07.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு பூஜை
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை
09.05.2022 திங்கள் கிழமை
காலை 11.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
மாலை 04.30 மணி முதல் சுற்று பொங்கல் வைத்தல்
மாலை 06.00 மணிக்கு கரகம் மற்றும் வேல் ஊர் சுற்றி வருதல்
இரவு 08.00 மணிக்கு அருள்மிகு மகா மாரியம்மனுக்கு பொங்கல் பூஜை
இரவு 09.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
இரவு 11.00 மணிக்கு வான வேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளத்துடன், அருள்மிகு மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வருதல்
10.05.2022 செவ்வாய் கிழமை
காலை 11.00 மணிக்கு இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை
நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்
மதியம் 02.00 மணிக்கு கரகம் மற்றும் வேல், பம்பை மேளம் முழங்க ஊர் வலம் மற்றும் மஞ்சள் நீராடி விளையாடுதல்
மாலை 06.00 மணியளவில் கரகம் குடி விடுதல்
அனைவரும் இலுப்பையூர் குடியழைப்பு திருவிழாவில் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறாம்!!!💐💐💐
இப்படிக்கு,
ஆ.வே.ச இளைஞர் அணி,
மற்றும் விழாக்குழுவினர்
இலுப்பையூர்.