Reach

இலுப்பையூரை வந்தடைவதற்கான வழிகள்:

இலுப்பையூர், இந்தியத் திருநாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், முசிறி வட்டத்தில், சாத்தனூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சி – துறையூர் மாநில நெடுஞ்சாலையில் (SH – 62) அமைந்துள்ள புலிவலத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், கரட்டாம்பட்டியிலுருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியிலுருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இலுப்பையூர், திருச்சியிலிருந்து துறையூருக்கும், துறையூரிலிருந்து திருச்சிக்கும் 5 நிமிடங்களுக்கு ஒரு புறநகர்ப் பேருந்து இருக்கிறது. அனைத்துப் பேருந்துகளும் புலிவலத்திலும் கரட்டாம்பட்டியிலும் நின்று செல்லும். புலிவலம் மற்றும் கரட்டாம்பட்டியிலிருந்து நகரப்பேருந்திலோ அல்லது ஆட்டோ / கார் / Omni மூலமாகவோ இலுப்பையூர் வந்தடையலாம்.
ஆட்டோ / கார் / Omniயின் தோராய வாடகை ரூ. 150/- முதல் ரூ. 250/- வரை.

கரட்டாம்பட்டியில் வாடகை கார் / Omniக்கு தொடர்பு கொள்க:

சுரேஷ் : +91 – 73732 28422

சேந்தன் டிராவல்ஸ் : +91 – 95783 02055

புலிவலத்தில் வாடகை கார் / ஆட்டோ / Omniக்கு தொடர்பு கொள்க:

ஶ்ரீ அய்யனார் டிராவல்ஸ் (P. முருகேசன்) : +91 –  98655 25226, +91 – 94424 41340

கரீம் : +91 – 98430 66871, +91 99942 89966

கார்த்திக் : +91 – 97900 97779

இலுப்பையூருக்கு வரும் நகரப் பேருந்துகளின் விவரம்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து: தடம் எண் : 27
புறப்படும் நேரம் : காலை 06. 30, காலை 11. 15, மதியம் 03. 05, மாலை 05. 35 மற்றும் இரவு 08. 25 மணி

புலிவலத்திலிருந்து இலுப்பையூருக்கு:
பேருந்துகள் புலிவலத்திற்கு வரும் நேரம்:
காலை 07. 10 (தடம் எண்: 3A), காலை 07. 40 (தடம் எண் : 27), காலை 09.20 (தடம் எண்: 3B), காலை 11. 40 (தடம் எண்: 3A), நண்பகல் 12. 05 (தடம் எண்: 27), மதியம் 01. 10 (தடம் எண்: 3C), மதியம் 02. 50 (தடம் எண்: 3A), மாலை 03. 55 (தடம் எண்: 27), இரவு 07. 35 (தடம் எண்: 3A) மற்றும் இரவு 09. 20 (தடம் எண் : 27).

கரட்டாம்பட்டியிலிருந்து இலுப்பையூருக்கு:
பேருந்துகள் கரட்டாம்பட்டிக்கு வரும் நேரம் :

காலை 03. 10 (தடம் எண்: 27), காலை 05. 30 (தடம் எண் : 3A), காலை 08. 20 (தடம் எண்: 3B), காலை 08. 35 (புத்தனாம்பட்டி செல்லும் புறநகர் பேருந்து), காலை 09. 40 (தடம் எண்: 3A), நண்பகல் 11. 45 (தடம் எண்: 3C), நண்பகல் 12. 45 (தடம் எண்: 3A), மதியம் 02. 15 (தடம் எண்: 3C), மதியம் 03. 50 (தடம் எண்: 3B), மாலை 05. 20 (தடம் எண்: 3A), மற்றும் இரவு 08. 25 (தடம் எண் : 3A).