Iluppaiyur Chithirai Festival 2023 – Special Programmes

இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2023, வருகின்ற மே மாதம் 05 ஆம் தேதி (சித்திரை 22) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 09 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. 

குடியழைப்பு விழாவினை முன்னிட்டு கீழ்கண்ட நிகழ்ச்சிகள் இளைஞர் அணியினரால் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • மே மாதம் 06 ஆம் தேதி – சனிக்கிழமை இரவு – திரைப்பட ஒளிபரப்பு
  • மே மாதம் 07 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை இரவு – திண்டுக்கல் துரை. சந்தோஷ் வழங்கும் களம் கலைப்பட்டறை குழுவின் நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சி
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – குத்து விளக்கு பூஜை*
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – அருள்மிகு மகா மாரியம்மன் திருவீதி உலா – பூ அலங்காரம்
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – வானவேடிக்கை மற்றும் ஈரோடு ஸ்ரீ வெற்றி விநாயகர் கிராமிய தப்பாட்ட கலைக்குழுவினரின் மேளதாளம்
  • மே மாதம் 08 ஆம் தேதி – திங்கட்கிழமை இரவு – பிரசாதப்பை.
  • மே மாதம் 09 ஆம் தேதி – செவ்வாய்கிழமை – டிரம் செட்*

*பரிசீலனையில் உள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாக நடத்துவதற்கு கிராமப் பொதுமக்கள், இளைஞர் அணியினர், மற்றும் பக்தர்கள் என அனைவரும் நன்கொடை தாராளமாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடை அளிக்க: https://pages.razorpay.com/iluppaiyur2023

இளைஞர் அணியினரின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கணக்கு விவரம் மே மாதம் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு வெளியிடப்படும். 

குடியழைப்பு விழாவின் முழு நிகழ்ச்சி நிரல் அனைத்து நிகழ்ச்சிகளும் இறுதி செய்த பின் வெளியிடப்படும். 

இப்படிக்கு

இளைஞர் அணியினர்.

One thought on “Iluppaiyur Chithirai Festival 2023 – Special Programmes”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *