குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018: நன்றி அறிவித்தல்

மே மாதம் 4 ஆம் தேதி (சித்திரை 21), வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இலுப்பையூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2018, மே மாதம் 8 ஆம் தேதி (சித்திரை 25) செவ்வாய் கிழமை இனிதே நிறைவுற்றது. குடியழைப்பு விழா மற்றும் பால்குட விழா சீரும் சிறப்புமாக நடைபெற நன்கொடையினை தாராளமாக தந்து உதவிய நல்லுள்ளங்களுக்கும், பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மற்றும் இரவுப்பகல் பாராமல் களப்பணி ஆற்றிய தன்னார்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், குடியழைப்பு விழாவிற்கு நேரில் வரமுடியாதவர்களும் இணையம் வழியாக கண்டுகளிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் உதவியவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதியாக குடியழைப்பு விழாவிற்கு நேரில் வருகைப்புரிந்து சிறப்பித்த அனைவருக்கும், பணிச்சூழல் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனாலும் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்துவரும் அனைவருக்கும் நன்றி! நன்றி!!

இலுப்பையூர் குடியழைப்பு விழா- 2018: முழு புகைப்படத் தொகுப்பினைக் காண:
https://photos.app.goo.gl/SkP7vL2Ks51KDU4J7

இப்படிக்கு,
விழாக்குழுவினர் மற்றும்
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *