இலுப்பையூர் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2026

பேரன்புடையீர்!
வணக்கம். உலகெங்கும் உள்ள இலுப்பையூர் மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2026, வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சித்ரா பௌர்ணமி பொன்னாளில் தொடங்கி, மே மாதம் 5 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை நடைபெற இருக்கின்றது.

குடியழைப்பு விழா – 2026 நிகழ்ச்சி நிரல்:
மே மாதம் 1 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை:
இரவு 10.00 மணி: புனித துளைக்கேணியில் கரகம் பாலித்து ஊர் சுற்றி வருதல்

மே மாதம் 2 ஆம் தேதி, சனிக்கிழமை:
காலை 11.00 மணி : கரகம் ஊர் சுற்றி வருதல்

மாலை 06.00 மணி : கரகம் ஊர் சுற்றி வருதல்

மே மாதம் 3 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை:
காலை 08.00 மணி:  பால்குட விழா‌ மற்றும் கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம் 01.00 மணி : அன்னதானம்
மாலை 06.00 மணி: அம்மனுக்கு சந்தன காப்பு அலங்கார பூஜை

மாலை 06.30 மணி:கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்

மாலை 08.00 மணி: மாவிளக்கு பூஜை

மே மாதம் 4 ஆம் தேதி, திங்கட்கிழமை:
காலை 11.00 மணி : கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்
மதியம்: அன்னதானம்
மாலை 06.00 மணி: கரகம், வேலுடன் ஊர் சுற்றி வருதல்,

மாலை 08.00 மணி: சுற்றுப்பொங்கல் பூஜை
இரவு 10.00 மணி: : அருள்மிகு மகாமாரியம்மன் குதிரை வாகனத்தில், வான வேடிக்கை முழங்க திருவீதி உலா

மே மாதம் 5 ஆம் தேதி, செவ்வாய் கிழமை:

மதியம் 01.00 மணி : அன்னதானம்

மதியம் 02.30 மணி : மஞ்சள் நீராடல்

மாலை: கரகம் குடி விடுதல்.

குடி அழைப்பு விழாவிற்கு இலுப்பையூர் இளைஞர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்:

03/05/2026 ஞாயிற்றுக்கிழமை: மாலை 06.30 மணி முதல் இரவு 10.00 வரை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் ஜீ தமிழ் உலகப் புகழ் கும்பகோணம் ராம் சிவகிருஷ்ணனின் கலைக்கூடல் குழுவின் கிராமிய கலைஞர்கள் வழங்கும் கருப்புசாமி நடனம் மரக்கால் நடனம் மற்றும் அம்மன் மற்றும் முருகன் நடனம்

04/05/2026 திங்கட்கிழமை: இரவு 10.00 மணியளவில் தொடங்கும் அம்மன் திருவீதி உலாவிற்கு வானவேடிக்கை மற்றும் திருச்சி புகழ் KBM கலைக்குழுவினரின் அதிரடி தப்பாட்டம்.

குடியழைப்பு விழாவிலும், அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கிராம பொதுமக்கள், உற்றார், உறவினர் மற்றும் பக்த கோடி பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு, அம்மன் திருவருளை பெறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு பார்க்க: https://iluppaiyur.com

இப்படிக்கு,
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *