பதினைந்தாம் ஆண்டு பால்குட விழா – 2019

குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.

பால் குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு கட்டணம் : ரூ. 150/-

பால் குடம் எடுப்பதுப் பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க :
தே. அரவிந்தன் (+91 – 96988 08960, +91 – 86670 80269),

த. ஆனந்தன் (+91- 96987 94856).

பால்குடம் எடுப்பவர்கள் முன்பதிவு செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

பால்குடம் எடுப்பதற்கான கட்டணம் செலுத்துவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயக் குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019, வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரை 27) வெள்ளிக்கிழமை தொடங்கி, மே மாதம் 14 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை கோலாகலமாக நடைபெற இருக்கின்றது. மேலும், குடியழைப்பு விழாவினை முன்னிட்டு, இலுப்பையூர் ஆ. வே. ச. இளைஞர் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு பால்குட விழா மே மாதம் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. பால்குடம் எடுக்க இருப்பவர்கள் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் தே. அரவிந்தனிடம் முன்பதிவு செய்யவும்.

குடிவரி: குடும்பம் ஒன்றுக்கு: ரூபாய். 500/-

பால்குடம் எடுக்க நபர் ஒன்றுக்கு: ரூபாய் 150/-

குடியழைப்பு விழாவிற்கும், பால்குட விழாவிற்கும் கிராமப் பொதுமக்களையும், பக்தகோடி பெருமக்களையும் வருக! வருக!! என வரவேற்கிறோம்.

மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு

இலுப்பையூர்.


விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்

பேரன்புடையீர்,

வணக்கம். வருகின்ற 13.09.2018 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை ஐந்து முப்பது மணி அளவில் நமது ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் புதிதாக செய்யப்பட்டுள்ள மூஞ்சூர் வாகனத்தில் விநாயகர் பூ அலங்காரத்துடன் திருவீதி உலா வர வர இருப்பதால் கிராம பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு முழுமுதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற்றுக் கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு,

நிர்வாகக்குழு.

2017-18ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டம்

அன்புடையீர்,

வணக்கம். இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய குடியழைப்பு விழா – 2018 மற்றும் 2017-18ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு கணக்கு சம்பந்தமாக சிறப்புக் கூட்டம் இன்று மாலை 06.01க்கு நமது ஆவேச திருமண மண்டபத்தில் தொடங்க இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

நிர்வாகக்குழு.